தமிழ்நாடு

தீபாவளி முடிந்து சென்னைக்கு திரும்பும் மக்கள்...!

Malaimurasu Seithigal TV

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் மறுபடியும் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். 

தீபாவளி பண்டிகை முடிந்ததால் இன்று முதல், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும். இதனால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்ப தொடங்கிவிட்டனர். மீண்டும் சென்னை திரும்பும் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்பும் வகையில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப தினசரி இயக்கக் கூடிய 2ஆயிரத்து 100 பேருந்துகளுடன் நேற்று ஆயிரத்து 275 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இன்று 975 பேருந்துகளும், நாளை 917 என மொத்தம் 3ஆயிரத்து 167 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதேபோல் சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு நேற்று ஆயிரத்து 250 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் ஆயிரத்து 395 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது, நாளை ஆயிரத்து 180 பேருந்துகள் என 3ஆயிரத்து 825 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது, சொந்த ஊருக்கு சென்ற மக்கள் மீண்டும் பணிகள் மேற்கொள்ளும் இடத்திற்கு சிரமமின்றி செல்ல தமிழக அரசு சார்பில் மொத்தம் 13 ஆயிரத்து 292 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்ததையொட்டி, சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்பும் வகையில் தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும், அதேபோல வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து அதிக அளவிலான பொதுமக்கள் சென்னைக்கு வருகை புரிய தொடங்கியுள்ளனர்.