தமிழ் புத்தாண்டு என்ற வரலாறை மாற்றி சிறுமைக்கு சொந்தக்காரர்கள் என்று சொன்னால் அவர்கள் திராவிட முன்னேற்றக் காரர்கள் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
மலர் தூவி மரியாதை:
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்காரின் 133 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அம்மா ஆட்சியில்:
மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய ஜெயக்குமார், 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா அம்மா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சித்திரை 1 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்று மாற்றினார் எனவும் 2012 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக அரங்கத்தில் இதற்கான நிகழ்ச்சியை அப்போது நான் பேரவை தலைவராக இருந்த பொழுது வழங்கினார் எனவும் தெரிவித்தார்.
உறங்கும் மருத்துவம்:
மேலும் தமிழ்நாடு மருத்துவ துறை உறங்குகிறது என்றும் அனைவருமே சார்ந்து இருப்பது அரசு மருத்துவமனை தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு மருத்துவமனையில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேற்றி உள்ளதாகவும் சமீபத்தில் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பெண் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது எனவும் கூறினார். அதனோடு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் எனவும் கூறினார்.
எதிர்க்கட்சிகளை ஒடுக்கவே:
அதேபோல நான் வரும் வழியில் ஆற்காடு சாலை நுங்கம்பாக்கத்தில் சாலை மறியலில் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் மூன்று நாட்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வெறும் ஊழல் மற்றும் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக மட்டும்தான் இந்த ஆட்சி நடைபெற்று வருவதாகவும் முன்னாள் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சரியான நேரத்தில்..:
கடந்த அதிமுக ஆட்சியில் 40 லட்சம் லிட்டர் நாள்தோறும் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது இருக்கக்கூடிய திமுக ஆட்சியில் 30 லட்சம் லிட்டர் பால் வினியோகம் மட்டுமே செய்யப்பட்டது என்று தெரிவித்தார். மேலும் பால் சரியான நேரத்தில் விநியோகிக்கப்படவில்லை என்றும் அதேபோல பால்கள் தரம் இல்லை எனவும் யாருக்கும் பால் சரியான நேரத்திற்கு போவதில்லை பால் வினியோகம் சரியான நேரத்திற்கு போகவில்லை என்றும் விமர்சித்தார்.
ஊழல் பட்டியல்:
பாஜகவுக்கு மத்தியில் அதிகாரம் உள்ளது எனவும் திமுகவின் ஊழல் பட்டியலை பற்றி வெளியிடுவது மட்டுமில்லாமல் அவர்களை சிறைக்கு அனுப்பினால் தமிழ்நாடு மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
இதையும் படிக்க: கோலாகலமாக கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு....!!!