தமிழ்நாடு

54 திருமண மண்டபங்களுக்கு அபராதம்... சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை...

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 54 திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நபர்கள் கட்டாயம் அரசின் பாதுகாப்பு  வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், மண்டப உரிமையாளர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் அரசின் வழிமுறைகளை பின்பற்றாத திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட இரண்டாயிரத்து 238 மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் மாநகராட்சி வருவாய்த்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு,  கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 54 திருமண மண்டபங்களுக்கு 2இரண்டு லட்சத்து 8 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.