ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மார்ச் -2
ஈரோடு இடைத்தேர்தல் பிப்- 27 ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது இன்றைக்கு (மார்ச் -2 ) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வாக்குகள் எண்ணிகையின் போதே திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஈவிகேஎஸ் முன்னிலை வகித்து வருகிறார்.
பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி
அதிமுகவுடன் கூட்டணிக்கட்சியான பாஜக இரண்டாம் நிலை கடந்த 9 சுற்றுகளிலும் பிடித்த நிலையில் பாஜகவின் மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் ஒருத்தன் துணி துவைத்தார், மற்றொருவன் பரோட்டா போட்டார், மயிலாட்டம், கொலுசு, குடம் குக்கர் இதெல்லாம் கொடுத்து ஈரோடு தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என்று திமுகவின் வெற்றி குறித்தும் அமைச்சர்கள் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
3 மாநில வெற்றி - கமலாலயத்தில் பாஜக கொண்டாட்டம்
நாகலாந்து, திரிபுரா மாநில தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னை தி.நகரில் உள்ள பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி. நடந்து முடிந்த 3 மாநில பொதுத்தேர்தலில் நாகாலாந்து மேகாலயா திரிபுரா இந்த மூன்றிலும் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று கூறிய அவர் மேகாலயாவில் கடந்த காலத்தில் நடந்த தேர்தலில் இரண்டு இடத்தை பெற்று இருந்த நிலைய பாஜக தற்போது 5 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது வாக்கு சதவீதம் கூடியுள்ளது, மேகாலயாவில் பாஜக நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறினார்.
மேலும் படிக்க | ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான்- உதயநிதி
மேலும் பேசிய அவர் நாகாலாந்தில் பாஜக கூட்டணி இடங்களில் 37 இடங்களில் பாஜக வென்றுள்ளது எனவும் திரிபுராவில் 60 இடங்களில் 32 இடங்களில் தனிப்பெரும் வெற்றியை அடைந்துள்ளது என்று கூறிய அவர் திரிபுரா முழுக்க முழுக்க மலைவாழ் மக்களை கொண்ட மாநிலம் ஏற்கனவே பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிற மாநிலம், ஊழலற்ற முறையிலும் நடுத்தர மக்களை ஊக்கப்படுத்துகின்ற அரசாங்கமாகவும் பாஜக இருந்தது என்றும் வடகிழக்கு மாநிலங்களில் 14 சதவீதம் இந்த மாநிலங்களுக்கு ஒதுக்கியதன் காரணமாக பிரதமர் மோடிக்கு கிடைத்த மா பெரும் வெற்றியாக கருதுகிறோம் என்றும்
கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக இருக்கின்ற திரிபுராவில் ஆட்சி அமைக்கின்றோம் என்றால் ஊழல் அற்ற நேர்மையற்ற ஆட்சி நடத்தி வரும் மோடிக்கு கிடைத்திருக்கிற வெற்றி என்று பெருமிதம் தெரிவித்தார்.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு - வி.பி துரைசாமியின் பதில்
ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வெற்றி பெற்று உள்ளது என்றும் கூறிய அவர் அங்கே ஒருத்தன் துணி துவைச்சான், மற்றொருவன் பரோட்டா போட்டான் என்று தமிழக அமைச்சர்களை விமர்சித்த வி.பி.துரைசாமி ஒயிலாட்டம், மயிலாட்டம் கொலுசு குடம் குக்கர் இதெல்லாம் கொடுத்ததனால வெற்றி பெற்றார்கள் என்று திமுகவின் வெற்றி குறித்தும் அமைச்சர்கள் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார்.