சிங்கம், சாமி என்ற சினிமா படங்களில் காவல் துறையினரின் சிறப்பு காட்டப்பட்டு இருக்கும் நம் காவல் துறையினர் நிஜ சிங்கங்களாக , சாமிகளாக உள்ளனர் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
விழிப்புணர்வு:
"போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை" குறித்த ஆவணத் திரைப்படப் போட்டி மற்றும் காமிக்ஸ் தொடர் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் சினிமாஸ் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகவும்சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன், காவல் துறை அதிகரிகள் மற்றும் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின்:
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் நிறைய நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபெருக்கி மூலம் போடுகின்ற நேரத்தில் யாரும் பாடாமல் இருப்பார்கள் எனவும் இன்றைய நிகழ்ச்சியில் மாணவர்கள் எழுச்சியோடு பாடினார்கள் எனவும் அனைத்து நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் சிங்கம், சிங்கம் 1,2,3 சாமி 1,2 என்று சினிமாக்களில் பார்த்து இருப்போம் எனக் கூறிய உதயநிதி ஆனால் உண்மையான சிங்கங்களாகவும், சாமிகளாகவும் நம் காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, போதை பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நேரத்தில் மாணவர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பேசினார்.
வாட்ஸ்அப் தற்போது உலகமாக உள்ளது எனவும் அதில் வரும் செய்தி உண்மையா பொய்யா இல்லையா என தெரியாமல் அதனை பகிர்ந்து வருகிறோம் எனவும் கூறிய உதயநிதி எனவே மாணவர்கள் உண்மையான செய்தி எது பொய் எது என்பதை அறிந்து கொள்ள பகுத்தறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் உண்மை செய்தி செல்ல அதிக நேரம் எடுக்கும் நேரத்தில் பொய் செய்தி வேகமாக பரவுகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த 15 நாட்களில் தமிழகத்தில் நடந்தது அனைவருக்கும் தெரியும் எனவும் எனவே மாணவர்கள் அனைவரும் தங்கள் பகுத்தறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என பேசினார்.
இதையும் படிக்க: சில இயக்குனர்கள் அது போன்ற காட்சிகளை எடுக்காமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.... விக்னேஷ் சிவன்!!!