தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியீடு...!!

Malaimurasu Seithigal TV

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று காலை தமிழ்நாடு அரசால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய தள சூதாட்டங்களால் இதில் பெங்கேற்கும் பலர் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் இணையதள சூதாட்டங்களை தடை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கொண்டு வந்தது. நெடுங்காலமாக நிலுவையில் வைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு நேற்று  ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில் இன்று காலை ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியிடபட்டது. 

ஒரு சட்டம் ஆளுநரின் ஒப்புதலை பெற்று அரசிதழில் வெளியிடப்பட்டால் அப்போதிலிருந்து அது நடைமுறைக்கு வருவதாகும்.