ஆன்லைன் சூதாட்ட சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மக்களவையில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பதிலளித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதால், மீண்டும் பேரவையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அமைச்சரவை முடிவு செய்தது.
இதையும் படிக்க : ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் கார்த்திகி...1 கோடி பரிசு வழங்கி பாராட்டிய முதலமைச்சர்!
இதனால் 2ஆம் முறையாக ஆன்லைன் தடை மசோதாவை அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்பதால், ஆன்லைன் ரம்மி உள்ளிட்டவற்றிற்கு தடை கோரி சட்டம் இயற்றுவது தொடர்பாக மக்களவையில் திமுக எம்பி பார்த்திபன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், அரசியலமைப்பின் 7வது அட்டவணை 34வது பிரிவில் உள்ள அம்சங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை மாநில அரசுகளே இயற்றலாம் எனவும், சில மாநில அரசுகள் ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றியுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார்.