தமிழ்நாடு

“எந்த அடிப்படையில் தகுதியை தேர்வு செய்கிறார்கள்?....” இபிஎஸ் கேள்வி!!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து உள்ளது எனவும் 12ம் வகுப்பு தேர்வில் என்றும் இல்லாத அளவிற்கு 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை எனவும் கூறிய எடப்பாடி பழனிச்சாமி இதையெல்லாம் கண்டித்தும், பொய் வழக்குகள் போடுவதை கண்டித்தும்,அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய அமல் படுத்தவில்லை என்பதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்த போதும் அனைத்து வரிகளையும் உயர்த்தியது தான் மக்களுக்கு இவர்கள் அளித்த பரிசு எனக் கூறிய இபிஎஸ் குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் திட்டத்தை விமர்சித்துள்ளார்.  அதாவது முதலில் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகள் என தற்போது அறிவித்துள்ளனர் எனவும் எந்த அடிப்படையில் தகுதியை தேர்வு செய்கிறார்கள்?  எனவும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.