தமிழ்நாடு

யாரும் எங்கேயும் தப்பித்துப் போக முடியாது..... பாஜக தலைவர் அண்ணாமலை!!

Malaimurasu Seithigal TV

பாஜக கட்சியின்  43-வது ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.  இது சாதாரணமானது ஒன்றும் இல்லை இது ஒரு வரலாறு.

செய்தியாளர் சந்திப்பு:

பாஜக கட்சியிதொடங்கப்பட்டு இன்று 43 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.  அதனை நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.  இதனைக் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.  

கேலியும் கிண்டலும்:

திரும்பி பார்க்கும் பொழுது இது தொண்டர்களாக இருக்கக்கூடிய எங்களுக்கு பிரமிப்பாக இருக்கிறது எனவும் கட்சியை துவங்கும் போது இரண்டு எம்பிக்கள் பதவி மட்டுமே தங்களுக்கு கிடைத்தது எனவும் அப்பொழுது பாஜகவை நாடாளுமன்றத்தில் பலரும் கேலியும் கிண்டலும் செய்தார்கள் எனவும் பேசியுள்ளார் அண்ணாமலை.

நிலை மாறியுள்ளது:

தொடர்ந்து பேசிய அவர், அப்பொழுது நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் பேசும்போது காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து கேலியம் கிண்டிலும் செய்தார்கள் எனவும் ஆனால் இன்று அந்த நிலை முற்றிலும் மாறி பாஜக 43 ஆம் ஆண்டில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்தள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கிய ஆண்டை விட குறுகிய காலத்தில் பாஜக அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது எனவும் இந்திய பிரதமர் பாஜகவின் இத்தகைய வளர்ச்சிக்கு தொண்டர்களின் உழைப்பு மட்டுமே காரணம் என்று கூறியதை சுட்டிக் காட்டிய அண்ணாமலை அது முற்றிலும் உண்மைதான் எனவும் கூறியுள்ளார்.

4 மடங்காக:

அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜக கண்டிப்பாக ஆட்சி பெறும் எனவும் அதற்கு தொண்டர்கள் உழைப்புகள் அதிகமாக இருக்கிறது எனவும் பாஜகவை பொறுத்தவரை 365 நாட்களும் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கும் நாள் தான் எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் பாஜகவை பொறுத்தவரை உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக சொல்ல முடியாது எனக் கூறிய அண்ணாமலை ஆனால் தற்பொழுது உறுப்பினர்கள் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தப்பிக்க முடியாது:

அண்ணாமலை பேசியதை தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர்.  அந்த கேள்விகளின் போது ஊழல் அமைச்சர்களின் பட்டியலை வெளியிடுவதாக கூறி இருந்தீர்கள் எனவும் ஆனால் தற்போது வரை ஏதும் வெளியிடப்படவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு எதுவும் எங்கும் போய் விடாது  எனவும் இருக்கும் அமைச்சர்களும் எங்கும் போய்விட மாட்டார்கள் எனவும் தெரிவித்த அவர் ஏப்ரல் 14ஆம் தேதி சொல்லியிருக்கிறேன் எனவும் அன்றைய தினத்தில் திமுகவின் இந்த ஆட்சி காலம் மட்டும் அல்ல போன ஆட்சிக் காலத்தின் விஷயங்கள் குறித்தும் தகவல் வெளிவரும் எனவும் யாரும் எங்கேயும் தப்பித்துப் போக முடியாது எனவும் கூறியுள்ளார்.