தமிழ்நாடு

4 ஆவது நாளாக தொடங்கிய என்.எல்.சி. பணிகள்...!

Tamil Selvi Selvakumar

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வளையமாதேவி கிராமத்தில் நான்காவது நாளாக நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பணிகளை தொடங்கியுள்ளது.

கடலூரில் என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அறுவடைக்கு தயாராக இருந்த விளைநிலங்களை என்.எல்.சி நிறுவனம் இயந்திரங்களை கொண்டு பணியை தொடங்கியது. இதனை கண்டித்து பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் இடையே, அன்புமணி கைது செய்யப்பட்டதால், போராட்ட களம் வன்முறையாக வெடித்தது. 

இந்நிலையில் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் 4வது நாளாக என்எல்சி நிறுவனம் தனது பணியை துவங்கியுள்ளது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக விளைநிலங்களில் பணிகள் மேற்கொள்ளாமல் ஏற்கனவே தொடங்கிய இடங்களில் பணிகள் தொடங்கியுள்ளன. எட்டு பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.