தமிழ்நாடு

கேரளா, ஆந்திரா, ஒடிசா உயர்நீதி மன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்!

Malaimurasu Seithigal TV

கேரளா, ஆந்திரா, ஒடிசா, மணிப்பூர் உட்பட 7 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.  

கேரளா, ஆந்திரா, ஒடிசா, மணிப்பூர் உட்பட 7 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவா் திரவுபதி முா்மு உத்தரவிட்டுள்ளாா். அதன்படி ஆந்திரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி தீரஜ் சிங் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேபோல் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுல், மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி சுபாசிஸ் தலபத்ரா, அதே நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் குஜராத் உயர்நீதிமன்ற  நீதிபதி ஆஷிஷ் ஜே தேசாய், கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் நீதிபதிகள் உஜ்ஜால் புயான், எஸ்.வெங்கட்டநாராயண பாட்டீல் ஆகியோருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயா்வு அளிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு, உச்சநீதிமன்ற வலைதளத்திலும் தீா்மானமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க