தமிழ்நாடு

GST முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் கோரிக்கை வைத்த எம்.பி

Malaimurasu Seithigal TV

சிறு குறு தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய கடமை அனைத்து அமைப்புகளுக்கும் இருப்பதாக கூறிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், ஜி.எஸ்.டி முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தங்களது கோரிக்கையாக உள்ளது எ என தெரிவித்தார்.

மாநில அரசின் உதவிகள் 

எம்.எஸ்.க்கு உட்பட்ட தொழில்களுக்கு மத்திய மாநில அரசுகள் என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என்ற கலந்தாலோசனை செய்கின்ற தொழில் பாதுகாப்பு மாநாடு கூட்டம் மார்ச் 5 ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறினார்.  தொழிலாளர்களை பாதுகாக்க எம். எஸ்.எம்.இ நடத்த உள்ள கூட்டத்தை வரவேற்பதாக குறிப்பிட்ட அவர், 
மூலப் பொருட்களான பஞ்சை ஒரு குறிப்பிட்ட கால அளவு வரை அதன் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார். 

ஜி.எஸ்.டி ரத்து 

வங்காளதேசம், இலங்கையிலிருந்து கொண்டு வரக்கூடிய பருத்திப் பொருட்களுக்கு டுயூட்டி ப்ரீ இருப்பதால் இங்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதாகவும்,மூலப் பொருட்கள் உற்பத்தியில் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் போது மாநில அரசு தனி கவனம் செலுத்தி அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். எம்.எஸ்.எம்.இ க்கு மட்டும் தனி அமைச்சர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வருவதாக கூறிய அவர்,ரேஷனில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். தேங்காய் எண்ணெயை கொடுப்பதன் மூலம் தென்னை விவசாயத்தை முழுமையாக பாதுகாக்க முடியும் என்றும் நடராஜன் அறிவுறுத்தினார். ஜி.எஸ்.டி முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தங்களது  கோரிக்கை என குறிப்பிட்ட அவர், ஜாப் ஆர்டர்களுக்கான ஜி.எஸ்.டியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.