தமிழ்நாடு

நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்து... ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சமர்ப்பிப்பு...

ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு முதலமைச்சரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

Malaimurasu Seithigal TV

ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு இன்று நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக 165 பக்க அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்களிடம் தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து தாக்கல் செய்ததாக தெரிவித்த அவர் இதுவரையில் 86,432 மனுக்கள் வந்துள்ளதாகவும் அதில் பெரும்பாலான பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்து நீட் தேர்வு வேண்டாம் என்பதாகவே இருக்கிறது என்று தெரிவித்தார்.

நீட் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பாகத் தான் நாங்கள் அறிக்கையை தயார் செய்து தாக்கல் செய்துள்ளோம். என்ற அவர் எங்களுக்கு கொடுத்த கால அவகாசம் போதுமானதாக இருந்தது என்றும் இதுவரையிலும் 86,000 கருத்துக்கள் நீட் தேர்வு வேண்டாம் என்பதற்கு சாதகமாக வந்திருக்கிறது.

மேலும் எங்கள் குழுவின் பணி காலம் முடிவடைந்து இருக்கிறது என்ற அவர் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அனைத்து தரப்பு பிரிவு மாணவர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.