தமிழ்நாடு

60 ஆண்டுகளுக்கு பிறகு காவிரியில் நடந்த நிகழ்வு...!

Tamil Selvi Selvakumar

கடந்த 60 ஆண்டுகளுக்குப் பின் காவிரிக்கு 600 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...

முழுகொள்ளளவிலேயே நீடித்து வரும் நீர்மட்டம்:

தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையில் போதிய தண்ணீர் கிடைத்ததால் மேட்டூர் அணையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 120 அடி என்ற முழுக் கொள்ளளவிலேயே நீர்மட்டம் நீடித்து வருகிறது. மேலும் அதிகப்படியாக வரும் தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், நடப்பு ஆண்டில்  இதுவரை  காவிரிக்கு 600 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது . இதற்குமுன் கடந்த 1960-61ம் ஆண்டில் 628 டிஎம்சி தண்ணீர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்தால், அடுத்த 6 மாதத்தில் 125 டிஎம்சியாக நீர்வரத்து அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நிகழும் பட்சத்தில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு காவிரிக்கு நீர் கிடைத்த நிகழ்வாக அது இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.