தமிழ்நாடு

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 500 க்கும் மேற்பட்டபோலீசார் பாதுகாப்பு

Malaimurasu Seithigal TV

சென்னை கொரட்டூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 500க்கும் மேற்பட்டபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

ஆர் எஸ் எஸ் ஊர்வல அனுமதி எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு  உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணி பொதுக்கூட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து இன்று தமிழகத்தில் மொத்தம் 45 இடங்களில் ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற உள்ளது.. இந்த ஊர்வல அனுமதிக்கு 12 கடுமையான நிபந்தனைகளில் விதிக்கப்பட்டுள்ளன பேரணையின் போது சாதி மதம் பற்றி தவறாக பேசக்கூடாது தடை செய்யப்பட்ட எந்த அமைப்புகளும் பற்றி ஆதரவாக எந்த கருத்தையும் பேசக்கூடாது என்றும் இந்திய இறையாண்மைக்கு ஒருமைப்பாட்டுக்கும் உறுவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறுகளும் ஏற்படாத வகையில் பேரணிக்கு அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம் இதனைத் தொடர்ந்து 
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைப்பெறும் ஆர் எஸ்.எஸ்.பேரணியில் 500 போலீசார் பாதுகாப்பு.

ஆர் எஸ் எஸ் பேரணி சென்னை மாவட்ட தலைவர் சக்திதாசன் தலைமையில் கொரட்டூர்   தனியார் பள்ளி  இருந்து தொடங்கி  கொரட்டூர் பேருந்து நிலையம், எம்ஜிஆர் மன்றம் வழியாக சென்று 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற உள்ளது.... இதற்கான பாதுகாப்பு பணியில் ஆவடி  ஆனையரகம் சார்பில் அம்பத்தூர் ஆவடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் தற்பொழுது ஆர் எஸ் எஸ் பேரணிக்காக பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..