தமிழ்நாடு

உறுப்பினர் எதிர்பார்த்ததைவிட கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உறுதி!

Tamil Selvi Selvakumar

சேலம் மூங்கப்பாடி மகளிர் பள்ளியில் உறுப்பினர் எதிர் பார்த்ததைவிட அதிகப்படியான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய சேலம் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன், சேலம் மாநகராட்சி மூங்கப்பாடி மகளிர் மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  உறுப்பினர் குறிப்பிட்ட பள்ளியில், 2ஆயிரத்து, 66 மாணவியர் பயின்று வருகின்றனர் என்றும், இதில் முதற்கட்டமாக 6 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதாகவும், நடப்பாண்டிலும் 6 வகுப்பறைகள் கட்டப்படும் என்றும், உறுப்பினர்  எதிர் பார்த்ததைவிட அதிகப்படியான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.