தமிழ்நாடு

இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

Malaimurasu Seithigal TV

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதேபோல, கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சோி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.