தமிழ்நாடு

“மு.க.ஸ்டாலின் யாருடைய கால்களையும் பிடித்து முதலமைச்சர் ஆனவர் அல்ல” - உதயநிதி ஸ்டாலின்

Malaimurasu Seithigal TV

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாருடைய கால்களையும் பிடித்து முதலமைச்சர் ஆனவர் அல்ல என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மருத்துவரிடம் லஞ்சம் பெற்றதாக தமிழ்நாடு லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்துள்ளது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவான அறிக்கை இருப்பதால் அரசு சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என உதகையில் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் உதகை என்சிஎம்எஸ் மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அரசு பேருந்து அரசுடைமாக்கி முதன் முதலில் இயக்கியது நீலகிரி மாவட்டம் தான் எனவும், அரசு தேயிலை தோட்ட கழகத்தை உருவாக்கியவர் கலைஞர் என்றும், நீலகிரி மாவட்டத்திற்கு நான் வருகை புரிவது பெருமை அடைவதாக கூறினார்.

மேலும் இளைஞர் மாநாட்டிற்கு சிறிய மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் 1 கோடியே 12 லட்சம் கொடுத்துள்ளது மிக பெரிய தொகை என்றார்.

மேலும் இந்தியாவிலேயே முதன் முறையாக இளைஞரணி உருவாக்கியது திமுக தான், 2024 -ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலுக்கு முன்னோட்டமாக தான் 2-வது இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. இந்த இளைஞரணி மாநாட்டை வெற்றியடைய செய்ய வேண்டும் என்றார்.

மேலும் அதிமுக இளைஞரணி மாநாட்டில் அந்த கட்சியின் கொள்கையோ, அதன் வரலாற்றை பேச முடியாமல் நடந்த மாநாடு, கேலி கூத்தான மாநாடாக நடத்தியதாக கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் யாருடைய கால்களை பிடித்து முதலமைச்சர் ஆனவர் இல்லை தனது உழைப்பால் உயர்ந்து முதலமைச்சர் ஆனவர் என்றார்.

மேலும், பிரமர் மோடியால் வாழக்கூடிய ஒரே குடும்பம் அதானி குடும்பம் என்றும், எனவே இந்தியாவை காப்பாற்ற இந்திய கூட்டணியை வெற்றி பெற வேண்டும்,  2021 சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை ஒட வைத்தது போல், 2024 -ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் முதலாளிகளை ஒட வைக்க வேண்டும் என்றார்.

மருத்துவரிடம் லஞ்சம் பெற்றதாக தமிழ்நாடு லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்துள்ளது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் தெளிவான அறிக்கை இருப்பதால் அரசு சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என தெரிவித்தார்.