நெல்லை ரெட்டியார்பட்டி அரசு ஆவின் நிறுவனத்தில் பால் கையாளும் திறனை அதிகப்படுத்தி கொள்முதலை அதிகரிக்கவுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள அரசு ஆவின் பாலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிக்க : சிங்கப்பூர் அமைச்சர்களுடன் முதலமைச்சர் இன்று சந்திப்பு...!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பொதுமக்களுக்கு மத்தியில் ஆவின் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், திருநெல்வேலியில் ஆவின் பால் கையாளும் திறனை உயர்த்த முடிவு செய்து இருப்பதாக கூறினார். அதன்படி, 45 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதலை 70 ஆயிரம் லிட்டராக உயர்த்த முயற்சி எடுத்து வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பிற நிறுவனங்களுக்கு போட்டியாக ஆவின் சார்பில் புதிய பால் பொருட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.