நெஞ்சுவலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்று மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.
சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு, கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், நீதிபதிகள் ஜாமீனை நிராகரித்தனர்.
இந்நிலையில், இன்று காலை அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டு அவதிப்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாக, சிறையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சிறை மருத்துவர்கள் அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்ட பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையடுத்து, மீண்டும் புழல் சிறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டார்.
இதையும் படிக்க | மக்களவைத் தேர்தல்: 5 மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பு...!