பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ஆவின் கால்நடை தீவன தொழிற்சாலையில் திடீர் ஆய்வு. முறைகேட்டில் ஈடுபட்டஇரண்டு அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள ஆவின் கால்நடை தீவன தொழிற்சாலையில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பால்வளத்துறை அமைச்சர் நசர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
ஆய்வின் போது பால் பாக்கெட் உற்பத்தி , பால் பிலிம் பயன்பாடு , பால் விற்பனைக்கு அனுப்புதல் போன்ற பதிவேடுகளில் பதிவு செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்ட செயற்பணியாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆவின் பால்பண்ணை வளாகத்திற்கு வெளியில் உள்ள பாலகத்தில் வெண்ணெய், நெய் மற்றும் இதர பால் பொருட்கள் இருப்பு குறைவு ரூபாய் 22,435 உள்ளதை கண்காணிக்காமல் முறைகேடு நடக்க காரணமாக இருந்த துணை மேலாளர் முகமது முஸ்தபா ஆகிய இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.