தமிழ்நாடு

"அவருக்கு ஜெனிடிக் பாதிப்பு உள்ளது" பெண்ணின் கை அகற்றப்பட்டது குறித்து மா.சுப்பிரமணியன் விளக்கம்!!

Malaimurasu Seithigal TV

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கை, கால் அகற்றப்பட்ட நோயாளிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு நடக்கவில்லை எனவும், அவருக்கு ஜெனிடிக் பாதிப்பு உள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜீனாத் என்பவரது மனைவி ஜோதி மார்பு வலி காரணமாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் ரத்த நாள அடைப்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததால், 'ஆஞ்சியோ கிராம்' பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது, ரத்த உறைதல் காரணமாக, வலது கை மற்றும் இரண்டு கால்கள் மிகவும் மோசமடைந்து கருப்பு நிறத்தில் மாறியுள்ளன. இதனால், அப்பெண்ணின் உயிரை காப்பாற்ற, வலது கையை மருத்துவர்கள் அகற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஜோதிக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டிய நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் நோயாளியை சந்தித்து, சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிகிச்சையில் தவறு நடக்கவில்லை நோயாளிக்கு ஜெனிடிக் பாதிப்பு உள்ளது என கூறினார். டெல்லிக்கு நோயாளியின் இரத்த மாதிரியை மாதிரி அனுப்பி வைத்து பரிசோதனை நடத்தியதால் இரத்த உறைதல் நோய் உள்ளது உறுதியானதாக அமைச்சர் தெரிவிததுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், எந்த மருத்துவரை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள் அவருக்கான செலவை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் அரசு மருத்துவரின் சிகிச்சை தவறு என்றால் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார். 

அரசு மருத்துவமனை குறித்து பொய் கருத்துகளை எடப்பாடி பழனிசாமி, முன்னான் அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்கிறார்கள் எனவும் சாடினார். தற்பொழுது நோயாளிக்கு  மற்றொரு காலும் இரத்தம் உறைதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய  அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை உதவிகளை செய்வோம் எனவும் குறிப்பிட்டார்.