உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை காவிரி மேலாண்மை வாரியம் கருத்தில் கொள்ளாவிட்டால் அது உச்சநீதிமன்ற அவ மதிப்பு வழக்காக மாறும் எனவும் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனது கோட்டூர்புரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது "கோரிக்கை ஏற்று உச்ச நீதிமன்றம் ஐயாயிரம் கன அடி தண்ணீரை 13/9/2023 முதல் திறந்துவிட வேண்டும் என்று காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது அதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், திறந்து விடப்படும் தண்ணீரால் குறுவை சாகுபடிகளை சிறப்பாக கவனிப்போம் எனவும் குறுவை சாகுபடிகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் நிவாரணம் அளிக்கப்படும் எனவும் தண்ணீர் மிகையாக இருக்கின்ற காலத்தில் இந்த பிரச்சனை இல்லை, கர்நாடகத்தில் இருக்கிற விவசாயிகளுக்கும் தண்ணீர் என்பது தேவையானது தான், எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் அதிலே ஓரளவிற்கு தமிழ்நாட்டுக்கும் தண்ணீர் ஒதுக்க வேண்டும். எங்களுக்குரிய தண்ணீரை மட்டும்தான் நாங்கள் கேட்கின்றோம், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை காவிரி மேலாண்மை வாரியம் கருத்தில் கொள்ளாவிட்டால் அது உச்சநீதிமன்ற அவ மதிப்பு வழக்காக மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "பேச்சுவார்த்தையில் பயனில்லை என்ற நிலையில் தான் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றோம். இப்பொழுது வெற்றி பெற்று இருக்கிறோம் அது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
அதிமுக பா.ஜ.க கூட்டணி விரிசல் ஏற்பட்டிருக்கிறது அதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு?, தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீட்டுக்காக இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடக்கும் அதைப்பற்றி கண்டு கொள்ளக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
அண்ணாவின் பெயரை தாங்கி இருக்கிற திமுக அண்ணாவைப் பற்றி அண்ணாமலை அவதூறாக பேசியதற்கு எந்த கண்டமும் தெரிவிக்கவில்லை அதிமுக தெரிவித்து இருக்கிறது இதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு?, யாரோ எப்போதோ நடந்த விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் தவறாக பேசியதற்கு இப்போது எதுவும் பேசக்கூடாது எதிர்வினை ஆற்ற கூடாது அரசியலில் எப்போதும் ஒதுங்கி தான் போக வேண்டுமே தவிர உரசி பார்க்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க || "காவேரி விவகாரத்தில் தீர்வை ஏற்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை" கர்நாடக அமைச்சர் பேட்டி!