தமிழ்நாடு

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு நேர்ந்த சவால்!!கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை ஆலோசனை....

பழுதான பள்ளிக் கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ்  நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Malaimurasu Seithigal TV

பள்ளிகளில் ஆசிரியர்களின் பாலியல் தொல்லை காரணமாக  மாணவிகளின்  தற்கொலைகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.  கடந்த மாதம் கோவையில் ஆசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதன் பிறகு மாநிலத்தின் சில பள்ளிகளில் இருந்து பாலியல் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.  

இப்படி தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் கொடூரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாலியல் துன்புறுத்தல் ஒருப்புறம் இருக்க, பள்ளியின் அலட்சியத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழப்பது மறுப்பக்கம் நடக்கிறது. சமீபத்தில் திருநெல்வேலி தனியார் பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் பதைபதைக்க வைத்தது.

இதனையடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இதில் கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், பாலியல் புகார் விவகாரங்கள், புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இடிக்கப்பட வேண்டிய பள்ளிகளின் விவரங்களை இந்த ஆலோசனை கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் உத்தரவிடப்பட்டுள்ளது.