தமிழ்நாடு

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை

முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். 

Malaimurasu Seithigal TV

சமீபத்தில் நெல்லை சாஃப்டர் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனால் மாணவர்களிடையே அச்சம் ஏற்பட்டது.  

இந்த சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசுப் பள்ளிகளில் உள்ள கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.

தரமற்ற கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறையால் அதிரடியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளிக் கட்டடங்கள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசிக்க இன்று அனைத்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில், சேதமடைந்த பள்ளிக் கட்டடங்களை இடிப்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகள், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது.