தமிழ்நாடு

கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்.. எப்போதிலிருந்துனு தெரியுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்

Suaif Arsath

கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், கனியாமூர் பள்ளி மாணவர்களை அருகிலுள்ள வேறு பள்ளிகளில் படிக்கச் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்வதற்கான பேருந்து உள்ளிட்ட வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றார். மேலும் எதுவாக இருந்தாலும் அனைத்து தரப்பினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

முன்னதாக கனியாமூர் தனியார் பள்ளி  மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது.  பள்ளி பேருந்துகள் தீ வைத்து  எரிக்கப்பட்டதுடன் வகுப்பறைகள் அடித்து உடைத்து சூறையாடப்பட்டது.  இதன் காரணம் அங்கு பயின்ற சுமார் 3500  மாணவர்களின் கல்வி பாதிக்கபபட்டுள்ளது.