தமிழ்நாடு

இன்று முதல் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்பபடாது...காரணம் என்ன?!

Malaimurasu Seithigal TV

கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பால் கொள்முதல் விலை உயர்வு, பணியாளர்களின் பணி வரன்முறை, கால்நடை தீவனம், கால்நடைகளுக்கான காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு கட்ட போராங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் போராட்டத்தை அடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதில் எந்த உடன்பாடும் ஏற்படாததை அடுத்து, இன்று முதல் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்பபடாது என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்தனர். 

அதன்படி,பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.  முன்னதாக, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை அடுத்து, பசும்பால் லிட்டர் ஒன்று 32 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும், எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு 41 ரூபாயில் இருந்து 44 ஆகவும்  உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.