தமிழ்நாடு

"சென்னையில் மிக்ஜாம் புயல் நிவாரணம் வழங்கப்படவில்லை" - எடப்பாடி குற்றச்சாட்டு

Malaimurasu Seithigal TV

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை திமுக அரசு வழங்கவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். 

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்டுவிட்ட நிலையில், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை திமுக அரசு வழங்கவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜாம் புயலால் சிரமப்படும் மக்களுக்கு முழு அளவில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள முறையாக திட்டமிடப்படவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்.  

உடனடியாக அனைத்து இடங்களுக்கும் மின் இணைப்பு வழங்கவேண்டும் என்றும்,  மருத்துவ முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பால், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகால் பணிகளுக்கு செலவிடப்பட்ட 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கான வெள்ளை அறிக்கை தரத் தயாரா என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.