தமிழ்நாடு

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வெளியேறுவதால் 100 அடிக்கு கீழ் சரியும் அணையின் நீர்வரத்து!

Tamil Selvi Selvakumar

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் 100 அடிக்கும் கீழாக குறைந்துள்ளது. 


மேட்டூர் அணையிலிருந்து  காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், வினாடிக்கு பத்தாயிரம் கன அடி நீர் வீதம் வெளியேறி வருகிறது. 

இதன்காரணமாக, அணையின் நீர்மட்டம் 99 புள்ளி 64 அடியாகவும், நீர் இருப்பு 64 புள்ளி 37 டி எம் சியாகவும் உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 651 கன அடியிலிருந்து 547 கன அடியாக குறைந்துள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் 100 அடிக்கும் கீழாக குறையும் வாய்ப்புள்ளது.  

இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே நீர்மட்டம் உயரும், அப்படி இல்லாத பட்சத்தில் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.