தமிழ்நாடு

மெகா தடுப்பூசி முகாம் தேதி மாற்றம்... தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எதிரொலி...

17 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவித்து இருந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அதை 19 ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Malaimurasu Seithigal TV

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ தகவல் மற்றும் நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு மன நல ஆலோசனை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.  பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

"1.50 லட்சம் மாணவர்கள்  நீட் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களிடம் உரையாடுவதற்கும் இந்த ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலை பெற்று அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் கட்டளை அறை மூலம் ஆலோசனை வழங்கப்படும். இதற்காக 333  மனநல ஆலோசகர்கள்  நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் மட்டும் 40 மனநல ஆலோசகர்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் ஆலோசனை தயார் நிலையில் உள்ளார். தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை இந்த தேர்வு இல்லை என்று பல்வேறு தேர்வுகள் உள்ளது போன்ற 12 content உள்ளது. முதலில் நீட்தேர்வை  2க்கும் மேல் எழுதியவர்களுக்கு  இந்த ஆலோசனை வழங்கப்படும் என்றார். 

1033 108 வாகனம் உள்ளது. இந்த 108 சேவை தொடங்கி 13 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது இந்த நாட்களில் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 17 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவித்து இருந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அதை 19 ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.19 ஆம் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

20 லட்சத்திற்கும் மேல் அன்று தடுப்பூசி போட இலக்கு வைத்து இருக்கிறோம். தமிழகத்தில் 52 % பேருக்கு தடுப்பூசி முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 48 %  பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடவில்லை.  இந்தியாவில் அதிக அளவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழகம்தான் அதுமட்டுமின்றி  2623 ஆதரவற்றவர்களுக்கும், 1754 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் முதல்வர் இன்று  ஆலோசனை நடத்த உள்ளார்" என தெரிவித்தார்.