தமிழ்நாடு

பட்ஜெட்2023: மருத்துவத்துறை- 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்ட நிதியுதவி!!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

மக்களை தேடி மருத்துவம்:

தமிழர்களின் பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தொற்று நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிய சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டமானது 716 தொழிற்சாலைகளில் பனிபுரியும் 8.35 லட்சம் தொழிலாளர்கள் வரை விரிவுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  

பன்நோக்கு மருத்துவமனை:

தொடர்ந்து பேசிய அவர் கிங்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பன்நோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் வடசென்னை மக்களுக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் 147 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் எனவும் கூறியுள்ளார்.

காப்பீட்டுத் திட்டம்:

அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் விரைவான காப்பீடுத் திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் வரை தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் நடப்பாண்டில் 11.82 லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

நிதியுதவி:

இதனுடன் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியுதவி 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.