சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான உடல் பரிசோதனை மருத்துவ முகாமை வரும் 17 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து மருத்துவ பரிசோதனைகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 17-ஆம் தேதி சென்னையில் பிரமாண்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக கூறிய அமைச்சர் மாசு, தலைமை செயலகத்தில் பணி செய்யும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும், அதனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க : காலை உணவுத் திட்டத்தால் அதிகரித்த வருகைப் பதிவேடு...!!!
மேலும், நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம், h3n2 பாதிப்பு உள்ளதா என சோதனை செய்ய சிறப்பு முகாம்கள் தினந்தோறும் நடைபெறுவதாகவும், H3n2 வால் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை, லேசான காய்ச்சல் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் வந்து ஓரிரு நாட்களில் குணமாவதால், பிரச்சனை ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாகவும், பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறியவர், தூத்துக்குடி சிறுமி உயிரிழப்பு குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா பேரிடருக்கு பிறகு உலகம் முழுவதும் குறைந்த வயதில் மாரடைப்பால் மரணம் அடைபவர்கள் அதிகரித்துள்ளதாகவும், இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருவதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் இருக்க கூடிய இருதய வல்லுணர்களிடம் இது குறித்து ஆராய்ச்சி செய்ய அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறினார்.