தமிழ்நாடு

மதிப்பெண் மட்டும் உங்களை மதிப்பீடு செய்யாது - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அம்பத்தூர் காமராஜர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 50ம் ஆண்டு பொன் விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துக்கொண்டார்.

Malaimurasu Seithigal TV

சென்னை அம்பத்தூர் காமராஜர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 50ம் ஆண்டு பொன் விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துக்கொண்டு 50 ஆண்டு சாதனை குறித்த புத்தகத்தை வெளியிட்ட அவர், 10,11,12ம் வகுப்புகளை சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவிகளுக்கு காசோலைகளை வழங்கி கெளரவித்தார். இதனிடையே நிகழ்ச்சியில் பேசியவர் கல்வி என்பது உரிமை என்பதை புரிந்துகொள்ளவேண்டியவர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும் என்பது தான் பிரச்சனை.. கடமை என்பதை தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்கள் மூலமாக நிரூபித்துகொண்டிருக்கிறார்.. பள்ளிக்கூடத்திற்கு வருகின்ற மாணவர்கள் உள்ளே நுழைந்து வெளியில் செல்லும் போது, மதிப்பெண் பெற்றேன், இந்த கல்லூரியில் சேர்ந்தேன் என்பதை விட நல்ல மனிதனாக வெளியே வந்தேன் என்பது தான் பெரிய செய்தி..

பெற்றோர்கள் நமது பிள்ளைகளை மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட கூடாது என்பதை அனைத்து பள்ளி நிகழ்ச்சியிலும் தெரிவிக்கிறேன்.. நம் பிள்ளைகளுக்கென்று தனித்திறமை உண்டு, அந்த திறமைகளை கண்டறியவேண்டியது தான் பெற்றோர்களின் கடமை. இதை ஒரு கூட்டு பொருப்பாக தான் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கண்டறிய வேண்டும்.. முதல்வர் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம், மாணவர்கள் வாங்கும் மதிப்பு மட்டும் உங்களை மதிப்பீடு செய்யாது, வாழ்கையின் மதிப்பீடுகள் பெறக்கூடிய ஒரு இடமாக கல்வி நிலையம் இருக்க வேண்டும் என குறிப்பிடுவார்.. அந்த வகையில் என்னை மாணவர்கள் படிக்க வைக்க வலியுறுத்திய அவர், எப்படி வாழ வைக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும் என முதல்வர் கூறியதாக தெரிவித்தார். 

 மேலும் படிக்க | 

 இந்த வயதில் படிப்பில் கவனம்பொங்கல் பரிசு ரூ.1000 : ஆலோசனையில் தமிழ்நாடு அரசு செலுத்தவேண்டும்.

முதல்வர் அறிமுக படுத்தவேண்டிய திட்டங்கள் நல்ல விதத்தில் பயன்ப்படுத்த கூடிய கல்வி நிலையமாக பார்க்கிறேன்..

நமது ஆசிரியர்கள் அறிவுரை அல்லது கண்டித்தாலும் அது நம்மீது உள்ள வெறுப்பினால் அல்ல உங்கள் மீது உள்ள அக்கறையின் காரணமாக தான்..

கல்லூரி படிப்பு முடித்த பின் ஒரு நல்ல நிலையில் இருக்கும்போது அறிவுரை வழங்க யாரும் இருக்க மாட்டார்கள் என அறிவுரை கூறினார்