மணிப்பூரில் ஏற்பட்டுள்ள மதக்கலவரம் மற்றும் வன்முறைகளைத் தடுக்க வலியுறுத்தி, கும்பகோணத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்து வருகிறது. இரு தரப்பில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் தேவாலயங்கள், கோயில்கள் தீ வைத்து கொளுத்தப்படு, மணிப்பூர் மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு வன்முறை நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
இதனைக் கண்டித்தும், அம்மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தியும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.
அதில், இந்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு இப்ப பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் வன்முறை சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கும்பகோணம் தலைமை தபால் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதில் இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்பாட்டமானது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு.பாரதி தலைமையில் நடைபெற்றது.
இதையும் படிக்க | ''முதலமைச்சரின் நல திட்டங்களை பார்த்து மத்திய அரசு பயந்து நடுங்குகிறது'' அமைச்சர் மெய்யநாதன் பேச்சு!