தமிழ்நாடு

சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலைமுரசு நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் அஞ்சலி!

Tamil Selvi Selvakumar

பத்திரிகை உலகின் ஜாம்பவான், சி.பா.ஆதித்தனாரின் 42வது நினைவு தினத்தையொட்டி மாலைமுரசு நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தனார் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருச்செந்தூரில் 1905 ஆம் ஆண்டு பிறந்த சி.பா.ஆதித்தனார், வழக்கறிஞராக பணியாற்றி 1942ம் ஆண்டு மதுரை முரசு என்ற இதழையும், தொடர்ந்து தமிழன் என்ற வார இதழையும் தொடங்கினார். 1942ம் ஆண்டு தினத்தந்தி நாளிதழைத் தொடங்கியதைத் தொடர்ந்து மாலைமுரசு இதழையும் தொடங்கி வித்திட்டார். தமிழ் பத்திரிகை உலகின் புரட்சிக்கு வித்திட்ட சி.பா.ஆதித்தனார் 1981ம் ஆண்டு மே 24ம் தேதி மறைந்தார். அவரது 42வது நினைவு நாளான இன்று, எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலைமுரசு நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக தினத்தந்தி குழும அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், விஜிபி சந்தோஷம், பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன், பனைமரத் தொழிலாளர் நலவாரியத் தவைர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் சார்பில் ஜே.சி.டி.பிரபாகரன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். நெல்லையில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ சி.பா.ஆதித்தனாருக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.