தமிழ்நாடு

ஆண் மாடலை பெண்ணாக மாற்றிய மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அகத்தியா அப்துல் கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார்!!

Suaif Arsath

ஒப்பனைக் கலைஞர் அகத்தியா ,தி கலாம்  உலக சாதனைக்காக தனது ஒப்பனையில் ஆண் மாடலை பெண்ணாக மாற்றியதற்காக சிறந்த அவுட்லுக் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் விருதை வென்றார்.

ஆண் மாடலை ஆணிலிருந்து பெண்ணாக மாற்றும் மேக்கப்

ஒப்பனை கலைஞர் அகத்தியா  உலக சாதனையின் ஒரு பகுதியாக  சல்மான் என்கிற ஆண் மாடலை ஆணிலிருந்து பெண்ணாக மாற்றும் மேக்கப்பைத் தேர்ந்தெடுத்து 2 மணி நேரத்திற்குள்  தனது ஒப்பனையை அழகாக முடித்தார். மாடல் ஆண் என்பதை அடையாளம் காண முடியாத அளவுக்கு அவரது மேக்கப் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் நிகழ்வில் பெரும்பாலான மாடல்களை விட அழகாக இருந்தார். இதன்மூலம் ஒப்பனைக் கலைஞர் அகத்தியாவின் திறமை, நுணுக்கம்  மற்றும் மேக்கப் தொழிலுக்கான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி

கலாமின் உலக சாதனைக்கான ஒப்பனை மராத்தான் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை ரைசிங் ஸ்டார்ஸ் மற்றும் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது இந்நிகழ்ச்சி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

ஒப்பனைக் கலைஞர்கள் Ramp Walk

90 ஒப்பனைக் கலைஞர்கள் பல்வேறுவிதமான ஒப்பனை கலைகளுடன் Spectacular Ramp Walk மூலம் அசத்தினர். ஒப்பனை கலைஞர்கள் தங்கள் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்தை 2 மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஒப்பனை கலைஞர்

90 விதமான ஒப்பனை  கலைகளில் தலைசிறந்த ஒப்பனையாக ஆண் மாடலை பெண்ணாக தத்ரூபமாக மாற்றிய ஒப்பனைக் கலைஞர் அகத்தியா சிறந்த ஒப்பனை கலைஞராக தேர்வாகி அப்துல் கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். இந்த ஒப்பனை நிகழ்ச்சியில் பிரபல ஒப்பனை கலைஞர் செல்டன், திரையுலக பிரபலம் பிரியதர்ஷினி, எழுத்தாளர் லதா சரவணன், வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி பிரீதா கணேஷ் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர்.