சென்னையில் அண்ணா சாலையில் கட்டிடத்தை இடிக்கும் போது நடந்த விபத்தில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த பத்மப்ரியா - குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும் - குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
உயிரிழப்பு:
சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடத்தை இடிக்கும் போது சாலையில் நடந்து சென்ற உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி முருகன் மகளான மென்பொருள் நிறுவன பணியாளர் பத்மப்ரியா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுவரை:
எந்த பாதுகாப்பும் இன்றி கட்டிடத்தை இடிக்கும் போது நடந்த விபத்தில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த பத்மப்ரியா - விற்கு உரிய இழப்பீடு இது வரை தமிழக அரசு அறிவிக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட நபர்களையும் கைது செய்யப்படவில்லை என குற்றம் சாட்டிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன்., தமிழக அரசு விரைவில் உரிய இழப்பீடாக பத்மப்ரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
விசாரணை:
மேலும் இந்த விபத்து குறித்து அரசு உரிய விசாரணை நடத்தி மீண்டும் இது போன்ற விலையில்லா மனித உயிர்கள் பலியாவதை தமிழக அரசு தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இரங்கல்:
அண்ணன் ஒ.பி.எஸ் சார்பிலும், சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்ற முறையில் எனது சார்பிலும் பத்ம ப்ரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
-நப்பசலையார்