தமிழ்நாடு

" பொருளாதார தேவையைப் பொறுத்தே பணப்புழக்கம் " - ஆர்.பி.ஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்.

Malaimurasu Seithigal TV

கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம்  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அதன்படி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டது. அந்த சமயத்தில் அந்த நோட்டுகளை  வங்கிகளில் மாற்ற பொதுமக்கள் பெரும் அவதியை சந்தித்தனர். 

இந்த நிலையில், தற்போதும், கடந்த 19-ம் தேதியன்று, 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, புழக்கத்திலிருக்கும் 2000  ரூபாய் நோட்டுகளை வங்கிகளில்  செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தது. 

இந்த அறிவிப்பு குறித்து பலதரப்பட்ட கருத்துகளும் வந்த வண்ணம் இருக்கிறது. இவ்வாறிருக்க, ஆர்.பி.ஐ. கவர்னர்  இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, பொருளாதாரத்தின் உற்பத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே போதுமான பணப்புழக்கத்தை மட்டும் ரிசர்வ் வங்கி அனுமதித்து வருவதாக ஆர்.பி.ஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சில்லறைப் பணவீக்கம், எதிர்காலத்தில் 4 புள்ளி 7 என்ற சதவீதத்திற்கும் கீழ் குறையும் எனவும் ஆர்.பி.ஐ-ன் ஒவ்வொரு முயற்சிகளும் மாற்று விகிதத்தை நிலைப்படுத்த உதவும் வகையில் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார். 

மேலும், சூழலைப் பொறுத்தே வட்டி விகித உயர்வை இடைநிறுத்த முடியும் எனவும், தன் கையில் எதுவும் இல்லை எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.