தமிழ்நாடு

" ரயில் விபத்திற்கு பராமரிப்பு குறைபாடே காரணம் " - காங். எம்.பி கார்த்தி சிதம்பரம்...!

Malaimurasu Seithigal TV

ரயில் விபத்திற்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறைபாடே காரணம்  என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 

சிவகங்கையில் புதிதாக மாவட்ட ஆட்சியராக பொருப்பேற்றிருக்கும் அஷா அஜித் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க முன்னாள் மத்திய நிதியமைச்சரின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் வந்தார். 

அப்போது, ஆட்சியரை சந்தித்து திரும்பும்போது செய்தியாளர்களை சந்தித்த கார்த்திசிதம்பரம் :- 

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழப்பு வேதனை அளிக்கிறது என்றும் இந்த விபத்திற்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறைபாடுகளே காரணம் என எங்களுக்கு தெரியவந்துள்ளது என்றும் இந்த அரசு பிரதமரின் கனவு திட்டங்களை நிறைவேற்றாமல், மக்களின் பாதுகாப்பிற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார். 

மேலும்,  ரயில்வேயில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன குறிப்பாக டெக்னிகள், பைலட்டுகள் என ஏராளமாக உள்ளன என சுட்டிக்காட்டி ஆனாலும்,  இந்த அரசு அதனை சரிசெய்யாமல்  தனியார்மயம் மற்றும் குறைந்த அளவு ஊழியர்களையே நியமித்து வருகின்றன என்றும் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இந்த அரசு வேகத்தை அதிகப்படுத்துவதையே பிரதானமாக செயல்படுத்துகிறது என்றும் குற்றம்சாட்டினார்.


அதனையடுத்து, ரயில்வேயில் 12 மணி நேரம் மட்டுமே பணிபுரிய வேண்டிய லோகோ பைலட்டுகள் 18 அல்லது 24 மணி நேரம் பணிபுரிகின்றனர் என்றும் அவற்றை இந்த அரசு சரி செய்யவில்லை எனவும்,  சாடினார்.

தொடர்ந்து, கோவாட்ச் குறித்த கேள்விக்கு, " இந்த அரசு எதையுமே பிரம்மாண்ட அறிவிப்பு செய்துவிட்டு அதனை முழுமையாக செயல்படுத்தவில்லை",  எனவும் " பிரதமர் தன்னை முன்னிலை படுத்துவதை மட்டுமே பிரதானமாக செய்து வருகிறார்",  எனவும் தெரிவித்தார். 

மேலும்,  நிவாரன தொகை குறித்த கேள்விக்கு, தற்போது அறிவித்திருப்பது குறைவான தொகை என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தை மத்திய மாநில அரசு உயர்த்தி தர வேண்டும் எனவும் பேட்டியளித்தார்.