தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழர்கள் இருவர் உள்பட 53 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூா் பகுதியை சோ்ந்த கருப்பணன் ராமு தற்போது உயிாிழந்துள்ளாா். இதனால் பலி எண்ணிக்கை 54 அதிகாித்துள்ளது. இதன் காரணமாக அவரது உறவினா்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.
இதனிடையே, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். குவைத் தீ விபத்து தொடர்பாக +965- 65505246 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் இந்திய தூதரகத்தின் முழுஆதரவையும் அளிப்பதாக அவர் உறுதியளித்தார்.
குவைத் தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளவும், இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வாசன் சிங் குவைத் சென்றாா்.
இதனிடையே, குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா். மேலும் தீ விபத்தில் பலியான இந்தியா்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த மோடி, உயிாிழந்தோாின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளாா்.
தொடா்ந்து தீ விபத்து தொடா்பாக பிரதமா் மோடி தலைமையில் டெல்லியில் மறு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாாிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர்கள் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் விவரங்களை பெற்று மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அயலக தமிழக துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
குவைத் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் இன்று காலை தாயகம் கொண்டு வரப்படவுள்ளன.
தெற்கு குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் இந்தியாவை சேர்ந்த 45 பேர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தீ விபத்தில் படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் குவைத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தீ விபத்தில் பலியான இந்தியா்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி, உயிாிழந்தோாின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து உடல்களை கொண்டு வர இந்திய விமானப்படைக்கு சொந்தமான C - 130J சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் நேற்று இரவு குவைத்துக்கு அனுப்பப்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அங்கிருந்து உடல்கள் அவரவா் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட உள்ளன. மேலும் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரின் உடல்களும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.