தமிழ்நாடு

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய கன்னியாகுமரி மாவட்டம்....

தொடரும் கனமழையால், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

Malaimurasu Seithigal TV

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே இடைவிடாது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாவட்டத்திலுள்ள ஏழு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, அவைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் விளைவால், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சாலைகளில் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் மழைநீரால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

மேலும் தோவாளை, செண்பகராமன்புதூர், பூதப்பாண்டி ஆகிய பகுதிகள் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியில் சேதமடைந்த விளைபயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தொடர் மழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.