கர்நாடக சட்ட சபை தேர்தல் வருகிற மே மாதம் 10-ம் தேதி நாடி பெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட பாஜகவின் சார்பிலும் காங்கிரஸ் சார்பிலும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு தொகுதி வாரியாக போட்டியாளர்களும் அறிவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது, தேர்தலுக்கான பிரசாரத்தை அனைத்து கட்சிகளும் தொடங்கி உள்ளன.
ஏற்கனவே கர்நாடக தேர்தல் களத்தில் பல்வேறு சர்ச்சைகள் நடந்திருந்தன. முன்னுரிமை அளிக்காத காரணத்தால், பாஜகவின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனர். பின்னர் போட்டியிடும் தொகுதிகளுக்கு வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டு, அதனைத்தொடர்ந்து, ஒவொரு தொகுதிக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர் . அடீஸோடு, தற்போது அணைத்து கட்சிகளும் தங்களின் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்ய தடை விதிக்கக்கோாி தேர்தல் ஆணையத்திடம் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, காவல்துறையில் இருந்தபோது கர்நாடகாவில் சில பகுதிகளில் அண்ணாமலை பணியாற்றியுள்ளதால், போலீசாா் அவருக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்க } பிரதமர் நிதிக்கு ஏன் தணிக்கை இல்லை? - காங்கிரஸ் கேள்வி!