அதிமுக ஆட்சி காலத்தில் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக எம். அன்புமணி என்பவர் பணியாற்றினார். பணிக்காலத்தில் இவர் மீது பல்வேறு முறைகேடுகள் குறித்து புகார்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் அன்புமணி 15-9-17 முதல் 11-3-21 வரை பணியாற்றிய காலத்தில் சட்டவிரோதமான செயல்பாடுகள் காரணமாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் சென்றது.
இதனை தொடர்ந்து 1-10-17 முதல் 31-12-19 வரை அவரது பணிக்காலத்தில் சேர்த்த சொத்து விபரங்கள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் இணை ஆணையர் அன்புமணி 40.90 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்து இருப்பது கண்டறிப்பட்டது. இதன் அடிப்படையில் பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இணை ணையர் அன்புமணி மீது இரண்டு பிரிவின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் செய்த முறைகேடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுத்துள்ள நிலையில் இணை ஆணையர் அன்புமணி லஞ்ச புகாரில் சிக்கிய நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது குமரி மாவட்ட இந்து அறநிலைய துறை அதிகாரிகளின் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.