தமிழ்நாடு

நண்பகல் வேளையில் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்...!!

Malaimurasu Seithigal TV

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் உள்ள மோக்கா புயல் அதிதீவிர புயல் கடந்த 06 மணி நேரத்தில் 13 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் உள்ள மோக்கா புயல் அதி தீவிர புயலாக கடந்த 06 மணி நேரத்தில் 13 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து  அதே பகுதியில், போர்ட் பிளேயருக்கு மேற்கு-வடமேற்கில் சுமார் 530 கி.மீ., காக்ஸ் பஜாருக்கு (வங்காளதேசம்) 950 கி.மீ தென்-தென்மேற்கு மற்றும் சிட்வே (மியான்மர்) க்கு தென்-தென்மேற்கில் 870 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. 

இது வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து கிழக்கு மத்திய வங்கக் கடலில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அதன் பின் தென்கிழக்கு வங்காளதேசம் (காக்ஸ் பஜார்) மற்றும் ( கியாக்பியு) மியான்மர் இடையே 14 ஆம் தேதி நண்பகல் வேளையில் அதிதீவிர புயலாக கரையை கடக்கும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு, 150 -160 கிமீ இடையே 175 கிமீ வேகத்தில் கூட காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.