தமிழ்நாடு

”ஒரே நாடு, ஒரே தேர்தல் என கூறும் மத்திய அரசு...காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாதது வேடிக்கையா இருக்கு” - சரத்குமார்

Malaimurasu Seithigal TV

ஒரே நாடு, ஒரே தேர்தல் என கூறும் மத்திய அரசால்  காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாதது வேடிக்கையாக இருப்பதாக சமத்துவ மக்கள் சட்சியின்  தலைவர் சரத்குமார் விமர்சித்துள்ளார். 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனரும், நடிகருமான சரத்குமார்,  திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்து வருகிறது. எனவே, காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு அவசியம் இருக்க வேண்டும் எனக் கூறினார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என கூறும் மத்திய அரசால்  காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாதது வேடிக்கையாக இருப்பதாகவும் கூறினார். காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு மேலும் வஞ்சிக்கப்பட்டால் தமிழ் நடிகர்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசியவர், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக டிசம்பர் 9ம் தேதி அறிவிக்கப்படும் என சரத்குமார் தெரிவித்தார்..