தமிழ்நாடு

திராவிட மாடல் அரசு திராவிடர்களுக்கு மட்டும்தானா... ஆதிதிராவிடர்களுக்கானது இல்லையா?!!

Malaimurasu Seithigal TV

ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளி கல்வித்துறைவுடன் இணைப்பது குறித்து ஆதிதிராவிடர் சமூக மக்களிடமோ கல்வியாளர்களிடமோ ஆசிரியர்களிடமோ எந்த ஒரு கருத்துக்கேட்பும் நடத்தாமல் தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக செயல்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது என பூவை ஜெகன் மூர்த்தி பேசியுள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் முயற்சியை கை விட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நடைபெற்று. அதற்கு தலைமையேற்ற புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது,

தமிழ்நாடு அரசின் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்ற 1138 ஆதிதிராவிட நலப் பள்ளிகளை பள்ளி கல்வித்துறையின் கீழ் இணைந்து செயல்படுத்த போவதாக திமுக அரசு அறிவித்துள்ளது எனவும் இதற்கு அதிமுக மற்றும் புரட்சி பாரதம் தவிர ஆளுங்கட்சியின் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் எனவும் கூறினார்.

மேலும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைப்பது குறித்து ஆதிதிராவிடர் சமூக மக்களிடமோ கல்வியாளர்களிடமோ ஆசிரியர்களிடமோ இது குறித்து எந்த ஒரு கருத்து கேட்பும் நடத்தாமல் தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது எனவும் இது மிகவும் கண்டனத்திற்குரியது எனவும் இதனால் பட்டியிலின மக்கள் வாழ்க்கையும் மாணவர்களின் கல்வியும் அதிகமாக பாதிக்கப்படும் என்றும் அதேபோல் ஆதிதிராவிட நலப் பள்ளியை பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கப்பட்டால் தமிழ்நாட்டில் ஜாதி வன்கொடுமை தலைவிரித்தாடும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஆரம்ப கல்வியை கேள்விக்குறியாக பாதிப்பு உண்டாகும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்  தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்ற கூறுகிறார்கள் எனவும் ஆனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதிய படுகொலைகள் ஆணவ படுகொலைகள் அதிகமாக நடைபெற்ற வருகிறது எனவும் கூறினார்.  அதேபோல் தமிழ்நாட்டில் தீண்டாமை கொடுமையும் திராவிட மாடல் ஆட்சியில் கேட்பார் இல்லாதது போல் அதிகமான சட்ட விரோதங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது என்பதும் வேதனை அளிக்கிறது எனவும் பேசினார்.

தொடர்ந்து கர்நாடகாவில் தேர்தல் பரப்புரை போது தமிழ்தாய் வாழ்த்து அவமதிக்க பட்டுள்ளது குறித்து என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது பற்று இருந்தால் அதற்கு கண்டனத்தை தெரிவித்து இருக்க வேண்டும் எனவும் ஆனால் அவர் எதுவும் செய்யவில்லை என்பது கண்டனத்திற்குரிய செயல் எனக் கூறினார்.