தமிழ்நாடு

நாடாளுமன்ற தோ்தலில் பாஜக - அதிமுக கூட்டணி உறுதியா?!

Malaimurasu Seithigal TV

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் பாஜக - அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு எதிராக அதிமுக வேட்பாளரை நிறுத்திய பின்னர் வேட்பாளரைத் திரும்பப் பெற்றது. அதிலிருந்தே அதிமுக, பாஜக உறவு விரிசல் கண்டுள்ளதாக பேசப்பட்டு வந்தது.  குறிப்பாக, எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலைக்கும் இடையே வாா்த்தைப்போா்கள் நடந்தன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினாா்.  அப்போது 2024 நாடாளுமன்ற தோ்தலில் பாஜவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.  மேலும் கடந்த தோ்தலை போல் தொகுதி பங்கீட்டில் குழப்பம் ஏற்படுவதை தடுக்க அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை தேர்தலுக்கு முன்பாகவே இறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பின்போது, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பாஜக தேசிய தலைவர் நட்டா, அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், தங்கமணி, வேலுமணி ஆகியோா் உடன் இருந்தனர்.