தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் ஆய்வு என்ற பெயரில் மிரட்டி பண வசூல்... மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த ஊழியர்கள்...

குமரிமாவட்டத்தில் டாஸ்மார்க் கடைகளில் ஆய்வு என்ற பெயரில் பணியாளர்களை மிரட்டி பணம் வசூல் செய்வதை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

Malaimurasu Seithigal TV

கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் மாவட்ட மேலாளராக திருநெல்வேலி மாவட்ட மேலாளர் சேம் சுந்தர் பொறுப்பு வகித்து வருகிறார். அவர் பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஆய்வு என்ற பெயரில் டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர் சந்திரன் மற்றும் தனியார் வாகன ஓட்டுநர் முருகன் ஆகியோரை தணிக்கையாளர் என்ற பெயரில் கடைகளில் புகுந்து தணிக்கை செய்து போலியான வகையில் அறிக்கை தயார் செய்து வருகினறனர்.

மாவட்ட மேலாளர் சேம் சுந்தர் மற்றும் தணிக்கையாளர்களால் டாஸ்மாக் கடையில் மொத்த விற்பனை தொகையில் ரூபாய் ஒரு லட்சத்து 5 ஆயிரம் வீதம் ஒருநாள் விற்பனை தொகையில் 3 லட்சத்து 15 ஆயிரம் ஆய்வு தொகையாக ரூபாய் 10 ஆயிரமும் கட்டாய வசூல் செய்து வருகின்றனர். மேலும் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யச் சொல்லி பணியாளர்களை கட்டாயப்படுத்தி தவறான வழியில் செயல்பட தூண்டி வருகிறார்.

இதனால் பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி பணியாளர்கள் தவறான பாதையில் செல்லாமல் தடுக்க வேண்டியும் இது அதிகாரிகளால் பொதுமக்களுக்கும் பணிமாளர்களுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும், மேற்படி உண்மைகளை தணிக்கை ஆய்வு செய்து டாஸ்மார்க் கடைகளில் பொருத்தப்பட்ட அரசு கேமராவையும் லஞ்ச ஒழிப்பு அதிகாரி மூலம் ஆய்வு செய்து உண்மை தெரிந்து முறைப்படி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.