தமிழ்நாடு

குடியிருக்கும் வீடுகளை பாரபட்சம் எடுத்து அகற்றுகின்றனர் - சீமான ஆவேசம் !!!

மக்களின் குடியிருக்கும் வீடுகளை பாரபட்சம் என்று எடுத்து அகற்றுகின்றனர் சாலை விரிவாக்க பணி என்றால் சாலையின் இருபுறங்களிலும் அகற்றப்பட வேண்டும்.

Malaimurasu Seithigal TV

குன்றத்தூர் - பல்லாவரம் சாலை விரிவாக்க பணிக்காக கடந்த மாதம் குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரைமாநகர் பகுதியில் சாலையோரம் உள்ள குடியிருப்புகள்,  கடைகள், செட்டுகள் ஆகியவற்றை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில் தொடர்ந்து வீடுகளை இடிக்கும் பணி நடந்து வந்ததையடுத்து இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டுமனை விற்பனை செய்ய வீட்டு மனைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு இடையூறாக இருக்கும் குடியிருப்புகளை அகற்றப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர் இந்நிலையில் குடியிருப்புகளை இழந்த பொது மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தனியார் வீட்டு மனைகள் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

சீமான் அளித்த பேட்டியில் கூறியதாவது : கரைமா நகர் பகுதியில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்ற மக்களின் குடியிருக்கும் வீடுகளை பாரபட்சம் என்று எடுத்து அகற்றுகின்றனர் சாலை விரிவாக்க பணி என்றால் சாலையின் இருபுறங்களிலும் அகற்றப்பட வேண்டும் ஆனால் ஒரு பகுதி மட்டுமே அகற்றப்பட்டு வருகிறது.