இந்திய இலங்கை மீனவர் பிரச்சனையில் அடுத்த மாதம் இந்திய இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி.
'மனதின் குரல்'
இந்தியா ரேடியோ மூலமாக 98-வது 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இதில் திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மனதின் குரல் ஒலி மற்றும் ஒளிபரப்பு நிகழ்வில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கட்சி நிர்வாகிகளுடன் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 2021 முதல் 2023 வரை தமிழ்நாட்டுக்கு மட்டும் ரயில்வே துறையில் 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் படிக்க | குக் வித் கோமாளி மணிமேகலை ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்
சர்வதேச அளவில் தரம்
இது கடந்த 2009 - 2014 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 8 மடங்கு அதிகம். வருகிற 2047- ஆம் ஆண்டு இந்தியா வல்லமை பொருந்திய தன்னிரைவடைந்த நாடாக மாற வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் உழைத்து வருகிறார். தமிழகத்தில் ரயில் நிலையங்கள் சர்வதேச அளவில் தரம் மேம்படுத்தப்படும் பணிகள் நடந்து வருகிறது. இதில் திருவள்ளூரும் அடங்கும். நமது நாட்டில் வான்வழி, கடல்வழி, தரைவழி மேம்படுத்தும் வகையில் முன்னேற்பாடு குறித்து இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக மீனவர்களை கைது செய்த போது மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு மீனவர்களின் மட்டும் விடுவிக்கப்படுகின்றனர் ஆனால் அவர்களது படகுகள் இலங்கை அரசு எடுத்துக் கொள்கின்றனர்.
மேலும் படிக்க | ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் நேரடியாகவும் மறைமுகமாவும் இந்தி திணிக்க பார்க்கிறார்கள் - திருமா
சுமூக தீர்வு
படகுகளையும் மீட்க இந்திய இலங்கை மீனவர் பிரச்சனையில் சமூக தீர்வு ஏற்படும் வகையில் அடுத்த மாதம் இந்திய இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காணப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.